Loading...
இன்றைய காலத்தில் உணவுப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளதால் பொருட்கள் தரமற்று கலப்படம் மிகுந்தவையாக உள்ளன. எனவே பொருட்களை தரமாகவும் சுத்தமாகவும் தயாரித்து மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் "நலமாக வாழ்வோம், பிறரையும் நலமாக வாழவைப்போம்" என்ற தாரக மந்திரத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே நேசம் எண்டர்பிரைசஸ் நிறுவனம்.
எமது நிறுவனத்தின் சொந்த தயாரிப்புக்களான செக்கு எண்ணெய் வகைகள், சத்து மாவு, சிறுதானிய காஞ்சி மிக்ஸ், கோதுமை மாவு, மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் பேரீச்சம்பழ சிரப் மற்றும் புதிதாக பேரீச்சம்பழ ஊறுகாய் என தயார்செய்கிறோம்.
மேலும் மார்கெட்டிங் பொருட்களாக அனைத்து உலர் பழங்கள், நாட்டு சர்க்கரை, மளிகை பொருட்கள் என அனைத்தும் எங்களிடம் உள்ளன. பேரீச்சம் பழங்களை நேரடியாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.
எங்கள் நிறுவனத்தில் பொருளாதார வசதி குறைந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவருகிறோம். இந்நிறுவனத்தின் மூலம் வரும் வருவாயை கொண்டு எங்களால் 10 ஆண்டுகளுக்குமுன் ஆரம்பிக்கப்பட்ட "HUMANESS TRUST" -ன் (மனிதநேய அரக்கட்டளை) மூலமாக, படிக்க ஆர்வமுள்ள, வசதி இல்லாத, ஆண் / பெண் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்று படிக்க வைத்து வருகிறோம்.
மேலும் கொரோன காலத்தில் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் படி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கியது, முன்களப்பணியாளர்களாகிய தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா மளிகை பொருட்கள் வழங்கியது மற்றும் மருத்துவ முகாம் என பலவகையான சமூக நற்பணிகள் செய்து வருகிறோம்.
நாங்கள் கல்விப்பணிகள் மற்றும் சமூக நற்பணிகளுக்கு தேவைப்படும் நிதியை யாரிடமும் நன்கொடையாக பெறுவதில்லை. அறக்கட்டளை துவக்கிய காலத்தில் எங்கள் நிறுவனர் (President) மற்றும் அரங்கவலர்கள் (Trustee) தங்களது சொந்த பணத்தை உபயோகித்து வந்தனர். செலவு அதிகரித்த வேளையில் அதை ஈடு செய்ய துவங்கப்பட்டதே "நேசம் எண்டர்பிரைசஸ்" நிறுவனம்.
இவ்வுலகில் தாய்க்கு இணையாக யாரும் நேசம் செலுத்த முடியாது அனைவரும் ஒருவரோடு ஒருவர் நேசத்துடன் வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நேசம் எண்டர்பிரைசஸ் என பெயர் சூட்டப்பட்டது.
நேசம் நிறுவனம் அமைந்திருக்கும் நேசம் நகர் பத்தளைப்பேட்டையில் 10 குடும்பங்கள் (சுமார் 50 நபர்கள்) அன்பை மட்டுமே ஆதாரமாக்கி ஜாதி மதம் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் கூட்டுக்குடும்பமாக அனைவருக்கும் ஒரே சமையல் என்ற முறையில் கூடி வாழ்ந்து வருகிறோம். ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களே சேர்ந்து வாழமுடியாத என்ற நிலை வளர்ந்துகொண்டே செல்கிறது அதனை பொய்யாக்கவும் அன்பு ஒன்று மட்டும் இருந்தால் யாராக இருந்தாலும் சேர்ந்து வாழ முடியும் என்பதை நிரூபித்து காட்டும்படியாக வாழ்ந்துவருகிறோம்.
இந்த அறக்கட்டளை மென்மேலும் வளர்ந்து இந்த சமுதாயத்திற்கு செய்யும் சேவையை பார்த்து உலகமே உலகமே ஒன்று கூடி வாழும் என்ற நம்பிக்கை வளர்ந்துள்ளது. அதைப்போல நேசம் எண்டர்பிரைசஸ் நிறுவனமும் விருட்சம் போல வளர்ந்து நன்கு படித்து வேலை இல்லாமல் இருக்கும் வசதி குறைவான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி பொருளாதார ரீதியாக அவர்களை முன்னேற்றவேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் நேசம் பொருட்களை வாங்கி உபயோகித்து அவர்களது மனங்களிலும் நேசம் பெருகி அமைதியான ஆனந்தமான இந்தியாவாக மாற்றி உலகிற்கு அன்பை பரிமாறவேண்டும் என்பதே எங்கள் எதிர்கால லட்சியம்.
மீண்டும் ஒருமுறை உறக்கச் சொல்கிறோம்...
| மனிதம் காப்போம்! | மனிதம் வளர்ப்போம்!! | பெருகட்டும் மனிதநேயம்!!! |